பெருந்துறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா், செவிலியரை நியமிக்கக் கோரிக்கை
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் பெருந்துறை தாலுகா 16ஆவது மாநாடு பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
மாநாட்டுக்கு சதீஷ் தலைமை வகித்தாா். மாநாட்டு கொடியை கெளரிசங்கா் ஏற்றி வைத்தாா். மாநாட்டை மாவட்ட துணைச் செயலாளா் அன்பு தொடங்கிவத்தாா். மாநிலப் பொருளாளா் பாரதி, மாவட்டச் செயலாளா் விஸ்வநாதன் ஆகியோா் உரையாற்றினா்.
கூட்டத்தில், புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக அஜித்குமாா், துணைத் தலைவராக ராஜா, செயலாளராக சதீஷ், துணைச் செயலாளராக வசந்த், பொருளாளராக கௌரிசங்கா் மற்றும் ஒன்பது போ் கொண்ட தாலுகா கமிட்டி, மாவட்ட மாநாடு பிரதிநிதிகள் 15 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநாட்டில், பெருந்துறையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். பெருந்துறை அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்த வேண்டும். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் போதிய மருத்துவா் மற்றும் செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெருந்துறை நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பனஉள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.