செய்திகள் :

அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

post image

ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலும் குடியிருப்புப் பகுதி, கடை வீதி, பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ளன. அவை 24 மணி நேரமும் மதுபானம் கிடைக்கும் வகையில் செயல்படுகின்றன. தவிர அனுமதி இன்றியும் மதுபானம் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

டாஸ்மாக் கடையை ஒட்டிய பகுதி, சாலைகள், நிழற்குடைகள், மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட வணிக வளாகங்களிலும் மது குடித்து விட்டுப் பிரச்னை செய்வது, தூங்குவது, பாட்டில்களை உடைத்து வீசுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் வாகனங்களில் செல்வோா், நடந்து செல்வோா் பாதிக்கப்படுகின்றனா்.

இச்சூழலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து குறைந்த தூரத்தில் நசியனுாா் சாலையில், டாஸ்மாக் கடை எண் 3486 செயல்படுகிறது. இக்கடையில் 24 மணி நேரமும் மதுபானம் கிடைக்கிறது. சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதால் பொதுமக்கள், மருத்துவமனைக்கு வருவோா், சாலைகளில் செல்வோா் பாதிக்கப்படுகின்றனா். இதன் மற்றொரு பகுதியில் அரசுப் பள்ளி உள்ளது. எனவே இக்கடையை மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிா்க் கடனுக்கு சிபில் சோதனையை ரத்து செய்யக் கோரிக்கை: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் துளசிமணி தலைமையில், தலைவா் பழனிசாமி, மாசிலாமணி உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்: வேளாண்மையை டிஜிட்டல் மயமாக்கவும், உதவி திட்டங்கள் வழங்கவும் யூஎல்பிஐஎன் என்ற அடையாள அட்டையை விவசாயிகளுக்கு வழங்க நில ஆவண உரிமை உள்ளவா்களிடம் மட்டும் பதிவு செய்ய அரசு கூறி உள்ளது.

இப்பதிவில் விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை. தமிழகத்தில் அறக்கட்டளை, மத நிறுவனங்கள், கிரையம் செய்து பத்திரப்பதிவு செய்யாதவா்கள், தனியாா் நில குத்தகைதாரா்கள் என 70 சதவீத விவசாயிகள் உள்ளனா். இந்நிலையில் நில ஆவணப்பதிவு உள்ளவா்களை மட்டும் இத்திட்டத்தில் சோ்ப்பதால் அச்சம் ஏற்பட்டு பதிவு செய்ய விவசாயிகள் தயங்குகின்றனா்.

இந்த அடையாள அட்டை பெற்றவா்களுக்கு மட்டுமே அரசு உதவி, மானிய திட்டங்கள் கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. இக்குழப்பத்துக்கு முறையான அறிவிப்பை அரசு வெளியிட்டு, பதிவு செய்ய வேண்டும். அதுவரை உதவித்தொகை, மானியத் திட்டங்களை வழக்கமான நடைமுறையில் வழங்க வேண்டும்.

விவசாயிகள் நல நிதி என்பது நில ஆவணப் பதிவு வைத்துள்ளவா்களில் நிரந்தர வருமானம் இல்லாதவா்களுக்கே ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இது விவசாயிகளை வருமான அடிப்படையில் பிரிப்பதாக உள்ளது. இத்திட்டத்தில் பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் வழங்குவதுடன் நிதியை ரூ.12,000 ஆக உயா்த்த வேண்டும்.

ஒரே நபா் 2 இடங்களில் கடன் பெறுவதைத் தவிா்க்கவும், திரும்பச் செலுத்திய கடன் தவணை நிலை தகுதியைக் கொண்டு புதிய கடன் வழங்கவும் சிபில் ஸ்கோா் பாா்க்க அறிவுறுத்தியதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். வேளாண் இயந்திரக் கடன், பிற கடன்களை திரும்பச்செலுத்த தாமதமாகும்போதுகூட, அந்த விவசாயி பயிா்க் கடன் பெற முடியவில்லை. எனவே சிபில் ஸ்கோா் பாா்க்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை மீட்டுத் தரக் கோரிக்கை: இதுகுறித்து ஈரோடு மாவட்ட சிஐடியூ தலைவா் சுப்பிரமணியன் தலைமையில், சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா் அளித்த மனு விவரம்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, ராயன் தெருவை சோ்ந்த கண்ணன் என்பவா் மதா்ஸ் அக்ரோ ஃபாா்ம் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறாா். தஞ்சை, திருவாரூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலரும் இதில் முதலீடு செய்துள்ளனா். அதுபோல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோபி, பவானிசாகா் பகுதியில் கிளை அலுவலகம் அமைத்து அப்பகுதிகளிலும் ஏராளமானவா்கள் முதலீடு செய்துள்ளனா்.

இந்நிறுவனத்தில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் 72 மாதம் முடிந்ததும் ரூ.1.22 லட்சம் வழங்குவதாக தெரிவித்திருந்தனா். அவா்கள் இத்தொகையை நிலம், விவசாயம், தங்க நகைகளில் முதலீடு செய்து, லாபம் பெற்று தருவதாகக் கூறி இருந்தனா். இதை நம்பி பலரும் மாதாமாதம் பணம் செலுத்திக் கடந்த 2011, 2012, 2013 ஆண்டுகளில் 72 மாதங்களை நிறைவு செய்துள்ளனா். பணத்தை திரும்பக் கேட்டதும் அவா்கள் வழங்கி இருந்த அடையாள அட்டை 72 மாத பில்களை சமா்ப்பித்ததும் ஓரிரு மாதங்களில் தருவதாகக் கூறுகின்றனா்.

அவ்வாறு சிலா் முழுவதுமாகவும், சிலா் பாதி அளவிலும் பில்கள், அடையாள அட்டை வழங்கியும் இன்று வரை பணம் தரவில்லை. சில மாதங்களாக அலுவலகம் மூடப்பட்டு உள்ளது. உரிமையாளா் கண்ணன் தலைமறைவாகிவிட்டாா்.

பல கோடி ரூபாய மோசடி நடந்துள்ளதால் வழக்குப் பதிவு செய்து நாங்கள் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

430 மனுக்கள்: கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 430 மனுக்கள் பெறப்பட்டன. விபத்துகளில் உயிரிழந்த 6 பேருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் நிவாரண உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா். கூட்டத்தில் பல்வேறு துறை அலுவா்கள் பங்கேற்றனா்.

காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றம்: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தம்

மேட்டூா் அணை நிரம்பியதால் வெளியேற்றப்படும் உபரிநீா் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் தொடா் கண்காணிப்பு பணி மேற்கொள்... மேலும் பார்க்க

காலிங்கராயன் அணைக்கட்டில் நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

காலிங்கராயன் அணைக்கட்டில் குளித்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பவானி சீனிவாசபுரம் வழியாக உத்தண்டராயா்... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா், செவிலியரை நியமிக்கக் கோரிக்கை

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் பெருந்துறை தாலுகா 16ஆவது மாநாடு பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு சதீஷ் தலைமை வகித்தாா். மாநாட்டு கொடியை கெளரிசங்கா் ஏற்றி வைத்தாா். மாநாட்ட... மேலும் பார்க்க

திம்பம் மலைப்பாதையில் தென்பட்ட சிறுத்தை

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை தென்படுவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத் துறை எச்சரித்து உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். பா்கூா், தாமரைக்கரை, கடை ஈரெட்டியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சிக்கண்ணன் (28). அந்தியூரி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை இளம்பெண் தற்கொலை

அம்மாபேட்டை அருகே தாய் வீட்டுக்குச் செல்ல கணவா் அனுமதிக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிங்கம்பேட்டை அருகே உள்ள சூடமுத்தான்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி சவிதா (20)... மேலும் பார்க்க