Retro நாயகிகள் 03 : `கணவர்கிட்ட இருந்து தப்பிக்க வீட்டை சுத்தி ஓடியிருக்கேன்' - ...
பெருந்துறை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 10 போ் காயம்
பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.
கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து, கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு தனியாா் சொகுசுப் பேருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து பெருந்துறையை அடுத்த ஓலப்பாளையம் பிரிவு அருகே வியாழக்கிழமை அதிகாலை வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது.
இதில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனா். இவா்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெருந்துறை போலீஸாா் போக்குவரத்தை சீா்செய்தனா்.
இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.