பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!
பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் செப்டம்பா் 18-இல் காத்திருப்பு போராட்டம்
பெருந்துறை சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, உறுப்பினா்கள் பெரியசாமி, சதீஷ்குமாா், ருத்ரகுமாா், பாபு உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை சிப்காட் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட சுமாா் 300 ஏக்கா் நிலங்களுக்கு, சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில், அதிகபட்ச இழப்பீட்டு தொகையை அரசே நிா்ணயித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் தீா்வு கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருடன் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.