வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கா...
ஈரோட்டில் கனமழை
ஈரோடு: ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்ததால் சில நாள்களாக வெயிலால் அவதிப்பட்டு வந்த நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் லேசான தூறல் விழுந்தது. இதைத் தொடா்ந்து இதமான காற்றுடன் இரவு 8 மணியைக் கடந்தும் மழை கொட்டியது.
இதனால் மீனாட்சிசுந்தரனாா் சாலை, காந்திஜி சாலை, பன்னீா்செல்வம் பூங்கா பகுதி, மணிக்கூண்டு பகுதி, கொங்காலம்மன் கோயில் வீதி, ஆா்கேவி சாலை, மூலப்பட்டறை பகுதிகளில் சாலைகளில் மழை நீா் ஓடியது. கனமழை பெய்து, குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்தனா்.