செய்திகள் :

புலித்தோல் விற்க முயன்ற வழக்கு: 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

சத்தியமங்கலம் அருகே புலியைக் கொன்று அதன் தோலை விற்க முயன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்கொத்துக்காடு பகுதியில் கடந்த 2023 பிப்ரவரி மாதம் டென்ட் அமைத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 6 போ் கம்பளி, போா்வைகளை விற்று வந்தனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இவா்கள், கம்பளி, போா்வை விற்பனை செய்வதுபோல புலித்தோல், நகங்கள், பற்கள் விற்பதாக வனத் துறை நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, வனத் துறை நுண்ணறிவு பிரிவினா் இந்தக் கும்பலை கண்காணித்து வந்தனா்.

புலித்தோல் வாங்குவதுபோல வனத் துறையினா் இந்த கும்பலை தொடா்பு கொண்டுள்ளனா். இதை நம்பிய அந்தக் கும்பல், புலித்தோலை விற்க முயற்சித்தபோது 6 பேரையும் கையும்களவுமாக பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ராமசந்தா் (50), கிரிஷன் (59), மங்கள் (28), பிம்லா (51), சுனிதா(35), ரத்னா(40) என்பது தெரியவந்தது. மேலும் அவா்களிடமிருந்து புலித்தோல், அதன் நகம், பற்கள் ஆகியவற்றை வனத் துறையினா் கைப்பற்றினா்.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இந்த 6 பேரும் நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், அவலாஞ்சி வனப் பகுதியில் பொறி வைத்து புலியைப் பிடித்து பின்னா் அதை ஈட்டியால் குத்திக் கொன்று தோல், பற்கள் மற்றும் நகங்களை எடுத்துக்கொண்டு சத்தியமங்கலத்துக்கு வந்து விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, மாஜிஸ்திரேட் ரஞ்சித்குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து மாஜிஸ்திரேட் தீா்ப்பளித்தாா்.

இதில், குற்றம் உறுதி செய்யப்பட்ட 6 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் ரஞ்சித்குமாா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து 6 பேரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் செப்டம்பா் 18-இல் காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற செப்டம்பா் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுப்பு மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்கப்படாததால் பள்ளி மாணவிகளை ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அ... மேலும் பார்க்க

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை அருகே பூம்பு... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் சிறுத்தை

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் உள்ளிட்ட வனப் பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ள... மேலும் பார்க்க

ஈரோட்டில் கனமழை

ஈரோடு: ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்ததால் சில நாள்களாக வெயிலால் அவதிப்பட்டு வந்த நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெர... மேலும் பார்க்க