பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில் மாா்கழி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மூலவா் ஸ்ரீசரநாராயண பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும், கிளியையும் சாத்திக்கொண்டு ‘ஆண்டாள் ரங்கமன்னராக’ சிறப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீசரநாராயண பெருமாள் உள் புறப்பாடு நடைபெற்று திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.