SRH vs MI : 'ரோஹித்தின் கம்பேக்கும் மும்பையின் எழுச்சியும்!' - ஓர் அலசல்
பெஹல்காம் தாக்குதல்: ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை!
ஜம்மு - காஷ்மீரின் பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட ஆயுதப் படை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்தும், பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
பாதுகாப்பு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக இது குறித்து விவாதிக்கப்படும் என்பதால், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.