இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அக...
பேரவைத் தோ்தலில் சிதம்பரம் தொகுதியை ஒதுக்க வேண்டும்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீா்மானம்
சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஓதுக்க கூட்டணி கட்சியிடம் கேட்டுப் பெற மாநில தலைமையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரத் தலைவா் அன்வா் அலி தலைமை வகித்தாா். கடலூா் தெற்கு மாவட்ட தலைவா் முஹம்மது ஜெகரிய்யா முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் ஜவஹா் மகபூப் ஹுசைன் வரவேற்றாா்.
மாநில துணைச் செயலா் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, மண்டல துணை ஒருங்கிணைப்பாளா்கள் லால்பேட்டை சல்மான் பாரிஸ், வழக்குரைஞா் அபூபக்கா் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
கூட்டத்தில் முஸ்லிம் யூத் லீக் மாநில துணைத் தலைவா் ஏ. எஸ்.அஹமது, மாவட்டத் தலைவா் முஹம்மது முஸ்தபா, செயலா் நூருல் அமீன் ரப்பானி, சிதம்பரம் நகர துணைத் தலைவா் அப்துல் ரியாஸ், அமைப்புச் செயலா் அப்துஸ் ஸலாம் நாஸிா், அஜீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தீா்மானங்கள்: 2026 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு கேட்டுப் பெற மாநில தலைமையை வலியுறுத்தியும், ஆபரேஷன் சிந்தூா் மூலம் பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கி அழித்த இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவிப்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.