செய்திகள் :

பேராசிரியர் மீது பாலியல் புகார்! நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பலி!

post image

ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் 20 வயது மாணவி, தீக்குளிக்க முயன்று, 90 சதவிகித தீக்காயங்களுடன் புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

கல்லூரி மாணவி ஏன் தீக்குளித்தார்? தீக்குளித்ததற்கான காரணம் என்ன? என்பதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில்,  தீக்காயப் பிரிவில் நிபுணர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மாணவி திங்கள்கிழமை இரவு பரிதாபமாக பலியாகினார். அவர் ஏன் தீக்குளித்தார் என்ற விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மாணவி தீக்குளித்தது ஏன்?

பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் பி.எட் 2- ஆம் ஆண்டு படித்துவந்த அந்த மாணவி, சனிக்கிழமை கல்லூரி முதல்வரின் அறைக்கு வெளியே தீக்குளித்தார்.

சுமார் 15 நாள்களுக்கு முன்னதாக பேராசிரியரும் கல்வித் துறைத் தலைவருமான(HOD) சமீர் குமார் சாஹு, மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மாணவி கல்லூரி முதல்வரிடம் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, மாணவியை தேர்வில் தோல்வியடைய வைத்துவிடுவேன் என்று அந்த பேராசிரியர் மிரட்டியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தீவிர உறுப்பினரான அந்த மாணவி, முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகளிடம் புகாரளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்து சாஹுவை பாதுகாத்ததாக, கல்லூரியின் முதல்வர் திலீப் கோஷை காவல் துறையினர் கைது செய்த நிலையில், மாணவி பலியானதும் சாஹுவையும் கைது செய்தனர்.

பலியான மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்ததோடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மாணவி தீக்குளித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள், ஆளும் பாஜக அரசைக் கண்டித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி பேராசிரியரே மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு, தீக்குளித்த சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Odisha student dies after self-immolation over inaction after sexual harassment allegation

இதையும் படிக்க :கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: செப்டம்பரில் அடுத்தகட்ட பேச்சு

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(எஃப்.டி.ஏ.) மேற்கொள்வது குறித்த அடுத்தகட்ட பேச்சு செப்டம்பரில் நடைபெற உள்ளது. கடந்த 2013-இல் இந்த பேச்சு முடங்கியது. இந்தநிலைய... மேலும் பார்க்க

“ஒட்டுமொத்த தேசத்துக்கும் சொந்தமாகிவிட்டார்” - சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீர்!

இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சாதனையை நிகழ்த்திய சுக்லா உள்பட 4 வீரா்களும் இந்திய நேரப்ப... மேலும் பார்க்க

2030க்குள் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கத் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்குப் பிகார் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அ... மேலும் பார்க்க

போதைக்கு அடிமையான மருமகனை திருத்த 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த மாமனார்!

லக்னௌ: போதைக்கு அடிமையான மருமகனை அவரது மாமனார் 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் பீலிபீட் மாவட்டத்தைச் சேர்ர்ந்தவர் முகமது யாமீன், இவர் போதை ப... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்! ஜெய்சங்கரை விமர்சித்த ராகுல்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுற... மேலும் பார்க்க

கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை ஊக்குவித்த சுபான்ஷு சுக்லா: மோடி

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்... மேலும் பார்க்க