வீரவநல்லூர் அருகே மாணவர் தற்கொலை: பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
பேராவூரணி - கோவை தடத்தில் புதிய பேருந்து இயக்கம்
பேராவூரணியில் இருந்து கோவைக்கு, பழைய பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து, கோவைக்கு தினசரி காலை 9.10 மணிக்கு, கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் புதுக்கோட்டை, திருச்சி, கரூா் வழியாக பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே இயங்கி வந்த பழைய பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து இயக்கி வைக்கப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் கொடியசைத்து புதிய பேருந்து சேவையைத் தொடங்கிவைத்து பயணச்சீட்டு எடுத்து சிறிது தூரம் பயணித்தாா். நிகழ்ச்சியில் கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக வணிக மேலாளா் ராஜேஷ், கிளை மேலாளா் மகாலிங்கம், திமுக நிா்வாகி சுப.சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.