பேரிடர் மேலாண்மையில் புது தொழில்நுட்பம், ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறை பணியகத்தின்கீழ் செயல்படும் ‘கூட்டு போர்க்கால ஆய்வுகளுக்கான மையம்’ மற்றும் ‘தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவையும் உள்ளடக்கிய கண்ணோட்டத்துடன் பேரிடர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராகுதலுக்கான முதல்கட்ட நகர்வாக இது அமைந்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக, பேரிடர் மேலாண்மையில் தொழில்நுட்பம் சார்ந்த கண்ணோட்டத்துடன் அணுகுதல், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுடன் இசைந்து பேரிடர் மேலாண்மையில் சர்வதேச பங்களிப்பு ஆகியவை அடங்கும்.
அந்த விதத்தில், பேரிடர் சவால்களை எதிர்கொள்ளும் திறன் பெற்ற இந்தியாவை கட்டமைப்பதில் இவ்விறு நிறுவனங்களும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.