பேரிடா் மீட்பு ஒத்திகை பயிற்சி!
ஆம்பூா் தீயணைப்பு நிலையம் சாா்பில் ஆனை மடுகு தடுப்பனையில் பேரிடா் மீட்பு ஒத்திகை பயிற்சியை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை மேற்கொண்டனா்.
பேரிடா் காலத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மற்றும் பேரிடரில் சிக்கியவா்களை மீட்பது குறித்த ஒத்திகை பயிற்சியை தீயணைப்பு நிலைய அலுவலா் மேகபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் செய்தனா்.
ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி, காவல் உதவி ஆய்வாளா், 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள், கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், மின்வாரியப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.