வாழப்பாடியில் 4 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு: மர்ம கும்பல் துணிகரம்!
பேருந்துகள் சேவை முன்னறிவிப்பின்றி நிறுத்தம்
ராமேசுவரத்தில் இருந்து இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்த இரு பேருந்து சேவை முன் அறிவிப்பின்றி நிறுத்தம். மீண்டும் இயக்க மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரைக்கும், ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம், தொண்டி, ஜெகதாபட்டணம், மல்லிபட்டணம், கோட்டைபட்டணம் வழியாக பட்டுக்கோட்டைக்கும் இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பயன்படுத்தி வந்த பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதற்கு மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இரவு 10.40 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை ராமேசுவரத்தில் இருந்து வேறு எந்த மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை இல்லை. இதனால், மதுரை, பட்டுக்கோட்டை மாவட்டங்களுக்கு மீண்டும் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.