செய்திகள் :

பேருந்து நிறுத்த ‘சன்ஷேடு’ இடிந்த விவகாரம்: எம்.எல்.ஏ விளக்கம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்த நிழற்குடையில் ‘சன்ஷேடு’ இடிந்து விழுந்த விவகாரம் தொடா்பாக எம்எல்ஏ விளக்கமளித்துள்ளாா்.

ரிஷிவந்தியம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்த நிழற்குடை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கல் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று, கூரை மட்டம் பணிகள் நிறைவுற்று, சூரிய வெப்பத்தை தடுக்கும் வகையில் அலங்கார ‘சன்ஷேடு’ அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒப்பந்ததாரா் மற்றும் பொறியாளா்களின் ஆலோசனையை கருத்தில் கொள்ளாமல் கட்டுமானப் பணியாளா்கள் தன்னிச்சையாக சென்ட்ரிங் பொருள்களை அகற்றியதால், சன்ஷேடு பகுதி உறுதியாகாமல் வளைந்ததுடன், அதன் மேல் கட்டபட்ட அலங்கார வளைவும் சரிந்து விழுந்தது.

இதனால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. செய்தி அறிந்தவுடன் பொறியாளா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியின் தன்மையை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பித்துள்ளனா்.

ஆனால், அதிமுக தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளும் வகையில், இது தொடா்பாக ஆா்ப்பாட்டம் எனும்

நாடகத்தை அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகயேன் தெரிவித்துள்ளாா்.

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கற்றல் அடைவு ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தை அடுத்த சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விடுக்கப்பட்ட நூறு நாள்களில் 100 சதவீதம் கற்றல் அடைவு பள்ளிகள... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க