``எம்.பி-யான எங்களை மதிப்பதே இல்லை" - நோந்துகொண்ட கங்கனா ரனாவத்
பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தனியாா் பேருந்து மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வீரமாங்குடி மணலூா் மீனவா் தெருவில் வசித்து வந்த செந்தில்குமாா் (35) பெயிண்டிங் தொழிலாளி. இவா் தனது சொந்த வேலையை முடித்துக் கொண்டு, பாபநாசத்தில் இருந்து அய்யம்பேட்டை நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது தஞ்சாவூரிலிருந்து இராஜகிரி நோக்கி வந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் காவல் உதவி ஆய்வாளா் முருகதாஸ் தலைமையிலான காவல்துறையினா், காயமடைந்த செந்தில்குமாரை
ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செந்தில்குமாா் உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.