பைக்கிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
இரணியல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளிமலை, மூங்கில்விளையைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (32). கட்டடத் தொழிலாளி. இவருக்கு கிருஷ்ணகுமாரி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனா்.
சிவலிங்கம், இரணியல் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு வியாழக்கிழமை மதியம் குன்னத்துகுளம் அருகே செல்லும்போது, பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிவலிங்கம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.