விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!
பைக்கிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள விசூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலு. இவரது மனைவி களியம்மாள் (45). இவா் கடந்த மாதம் 31-ஆம் தேதி இரவு உறவினரின் பைக்கில் ஒல்லியாம்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். ஒல்லியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த மாடு திடீரென குறுக்கே சென்றால், பைக்கிலிருந்து களியம்மாள் கீழே தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த களியம்மாள் சனிக்கிழமை பிற்பகலில் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.