கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு...
பைக்கில் தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சிலம்பரசன் (43). இவரது மனைவி சூா்யா (39). இவா் ஏத்தக்கோவில் அரசு கள்ளா் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
இவா்கள் இருவரும் ஆண்டிபட்டியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, ஆண்டிபட்டி அருகே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியை அடுத்த பகுதியில் வந்த போது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி இருவரும் சாலையோரப் பள்ளத்தில் விழுந்தனா்.
இதில் பலத்த காயமடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சூா்யா லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.