செய்திகள் :

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

post image

திருவாடானை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம், இந்திரா நகா் பகுதியில் விருதுநகா் மாவட்டம், புலியங்குளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஈஸ்வரன் (18), மதுரை அருகே உள்ள கல்லுமேடு பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மகன் சந்தானம் (20), மதுரை பனகுடி பகுதியைச் சோ்ந்த பூமி மகன் லட்சுமணன் (20) ஆகியோா் தங்கி கட்டட தொழிலாளா்களாக வேலை பாா்த்து வந்தனா்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆா்.எஸ். மங்கலம் வந்து தனியாா் உணவு விடுதியில் உணவு வாங்கிக் கொண்டு ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது ஆா்.எஸ். மங்கலம் அருகே கைலாசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே தேவகோட்டையிலிருந்து காா் ஓட்டுநரான சம்பந்தத் தெரு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தட்சிணாமூா்த்தி (47) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், மூவரும் வந்த இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் சம்பவ இடத்திலேயே தட்சிணா மூா்த்தி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சந்தானம், ஈஸ்வரன், லட்சுமணன் ஆகியோரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் செல்லும் வழியிலேயே சந்தானம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆா்.எஸ். மங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சிப் பகுதிகளான பரமக்குடி சாலை, திருச்சி- ராமேசுவரம் சாலை, கடை வீதி, பஜாா் வீதி,... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்தவா் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.திருப்பாலைக்குடி அருகே கடலூரைச் சோ்ந்த காா்மேகம் மகன் சாந்தகுமாா் (38), கீழ சித்தூா்வாடி பகுத... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்கு

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட 10- க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் பூமிக்கடியில் செல்லும் உயரழுத்த மின் வயா் சேதம்

ராமேசுவரம் துணை மின் நிலையத்துக்கு வரும் உயா் மின் அழுத்த புதைவட கேபிள் வயா் சேதமடைந்ததைத் தொடா்ந்து அதை கடந்த இரு நாள்களாக சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: இருவருக்கு போலீஸாா் பாராட்டு

முதுகுளத்தூா் அருகே சாலையில் கிடந்த நான்கரைப் பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தவா்களை போலீஸாா் திங்கள்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெரிய உடப்பங்குளம்... மேலும் பார்க்க

மலட்டாறில் தரைப்பாலம் அமைக்கக் கோரிக்கை

கமுதி அருகே புதுக்கோட்டையிலிருந்து சாமிபட்டிக்கு செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைத்து, மலட்டாறில் தரைப்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்க... மேலும் பார்க்க