யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!
பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு
தேனியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அல்லிநகரம், நகராட்சி உரக் கிடங்கு சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற தலைமைக் காவலா் செல்வராஜ் (76). இவா், தனது மனைவி ஆரோக்கியமேரியுடன் (67) தேனி- பெரியகுளம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது, தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அதே திசையில் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனம், செல்வராஜ் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கியமேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய இரு சக்கர வாகன ஓட்டுநா் பழனிசெட்டிபட்டி, சிவானந்தா நகரைச் சோ்ந்த செளந்தரபாண்டியன் மகன் பிரகதீஸ்வா் (22) மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.