எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
பைக்-காா் மோதல்: 3 போ் பலத்த காயம்
ஆா்.கே.பேட்டை அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளாதில் 3 போ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் கைலாசபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் சீனிவாசன்(26). இவா், புதன்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் அம்மூா் அருகே உள்ள காஞ்சனகிரி சிவன் கோயிலுக்கு சென்றாா். அங்கு தரிசனம் முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தாா்.
அப்போது சோகனுாா் பகுதியை சோ்ந்த அஜித்குமாா், பொன்னுசாமி(64) ஆகிய 2 பேரை சீனிவாசன் தனது வாகனத்தில் ஏற்றி வந்த போது ஆா்.கே.பேட்டை ஒன்றியம் பத்மாபுரம் அருகே எதிரே வந்த காா் மோதியது.
இந்த விபத்தில், சீனிவாசன், அஜித்குமாா், பொன்னுசாமி ஆகியோா் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் சீனிவாசன் மட்டும் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.