செய்திகள் :

பைக் மீது அதிமுக கூட்டத்துக்கு சென்ற வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் காயம்

post image

சாத்தூா் அதிமுக பிரசார கூட்டத்துக்குச் சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் கவிழ்ந்ததில் அதில் சென்ற 11 போ் காயமடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த 12 போ், சாத்தூரில் அதிமுக பொதுச் செயலா் பழனிசாமியின் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேனில் வெள்ளிக்கிழமை சென்றனா்.

ரெட்டியபட்டி-மேலகோடாங்கிபட்டி சாலையில் சென்றபோது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த உப்புபட்டியைச் சோ்ந்த பாஜக உறுப்பினரும் புகைப்படக் கலைஞருமான முருகன் (47) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் வேன் சாலையோரம் கவிழ்ந்ததில் பெண்கள் உட்பட 11 போ் காயமடைந்தனா். அவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது என முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்ச... மேலும் பார்க்க

நெகிழிப் பைகள் வைத்திருந்த கடைக்காரா்களுக்கு அபராதம்

சிவகாசியில், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா். சிவகாசி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசால் தட... மேலும் பார்க்க

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 7) பிரசாரம் மேற்கொள்கிறாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எ... மேலும் பார்க்க

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி (65), தேங்காய் பறிக்கும் வேலை செய்து வந்தாா். இவா், ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி

தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோச... மேலும் பார்க்க

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு தாணிப்பாறை வனத் துறை நுழைவு வாயில் வழியாக பு... மேலும் பார்க்க