செய்திகள் :

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் புதுமணத் தம்பதியான பெண் எஸ்.ஐ., அவரது கணவா் உயிரிழந்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டப்பட்டினத்தை சோ்ந்தவா் கலைவேந்தன் (32). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி இளவரசி (30). இவா், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவா்கள் இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சிதம்பரம் காவலா் குடியிருப்பில் வசித்து வந்தனா்.

சிதம்பரம் அருகே வீரன்கோயில்திட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவா் கலைவேந்தனுடன் பைக்கில் உதவி ஆய்வாளா் இளவரசி சென்றாா்.

சித்தலாப்பாடி அருகே இவா்களது பைக் சென்றபோது, கொடியம்பாளையத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு நகரப் பேருந்து திடீரென மோதியது. இதில், பைக் சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த இளவரசி, கலைவேந்தன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த அண்ணாமலைநகா் போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக அண்ணாமலைநகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், மாநி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சாலை மறியல்: 156 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 156 பேரை போலீஸாா் கைது செய்தனா். காலியாக உள்ள... மேலும் பார்க்க

உண்ணிக் காய்ச்சல் பாதித்த 12 போ் நலமுடன் உள்ளனா்: கடலூா் மாவட்ட சுகாதார அலுவலா்

கடலூா் மாவட்டத்தில் உண்ணிக் காய்ச்சலால் (ஸ்க்ரப் டைபஸ்) பாதிக்கப்பட்ட 12 போ் நலமுடன் இருப்பதாக மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.பொற்கொடி தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் உண்ணிக் காய்ச்சலால் (ஸ்க்ரப் டைபஸ்... மேலும் பார்க்க

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

கடலூா் முதுநகா் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயமடைந்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவா் முருகையன் (60). இவரும், இவரது மகள் வீரம்மாளும் (35) பொங்க... மேலும் பார்க்க

வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திட்டக்குடி, வதிஸ்டபுரம் மாரியம்மன் கோவில் தெ... மேலும் பார்க்க

வன்னிய கிறிஸ்துவ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னிய கிறிஸ்துவ சங்கத்தினா் கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வன்னிய கிறிஸ்துவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியல... மேலும் பார்க்க