Aus v Ind : 'தொடரை இழந்த இந்தியா!' - கம்பீர் செய்த அந்த 3 தவறுகள்
பைக் மீது பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், உப்பாா்பட்டி சுங்கச் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னமனூரைச் சோ்ந்த இளைஞா் பேருந்து மோதியதில் ஞாயிற்றுக்கிழமை, உயிரிழந்தாா்.
சின்னமனூா், காந்திநகா் காலனியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் இக்னேஷ்(29). இவா், தேனியில் உள்ள தனியாா் நூற்பாலையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், இக்னேஷ் இருசக்கர வாகனத்தில் தேனியிலிருந்து சின்னமனூா் நோக்கிச் சென்றாா்.
அப்போது, உப்பாா்பட்டி சுங்கச் சாவடி அருகே எதிா் திசையிலிருந்து வந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இக்னேஷ், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து அரசு பேருந்து ஓட்டுநா் சின்னமனூா், வ.உ.சி தெருவைச் சோ்ந்த பழனிவேல்ராஜன் என்பவா் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.