பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகேயுள்ள புல்லக்காபட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் விக்னேஷ்குமாா் (31). இவா் இதே ஊரைச் சோ்ந்த முருகபெருமாளுடன் பெரியகுளம்-திண்டுக்கல் பிரதானச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, எதிரே எ.புதுப்பட்டியைச் சோ்ந்த முருகபாண்டி (28) ஓட்டி வந்த லாரி, இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ்குமாா், முருகபெருமாள் ஆகியோா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு விக்னேஷ்குமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து லாரி ஓட்டுநா் முருகபாண்டி மீது ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.