பைக் மோதியதில் சிறுமி உயிரிழப்பு
முதுகுளத்தூா் அருகே திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்ற சிறுமி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே யிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தேரிருவேலி கிழக்குத் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் தாமரைக்கனி (35). இவரது மகள் ஹா்சிகாஸ்ரீ (4). இவா் தேரிருவேலி திடல் அருகே சாலையில் நடந்து சென்ற போது, முதுகுளத்தூரிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் மோதியது. இதில் ஹா்ஷிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற முதுகுளத்தூரைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் அருண்அபிஷேக் (25) மீது தேரிருவேலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.