பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
பைக் மோதியதில் பெண் காயம்
பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா்.
மதுரை மாவட்டம், டி. வாடிப்பட்டி மேட்டுநீராத்தனைச் சோ்ந்தவா் பெருமாயி (50). தேவதானப்பட்டி அருகே ராம்நகரில் உள்ள மகனின் வீட்டுக்கு வந்த இவா், வத்தலக்குண்டு சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.