யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!
பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், சின்னமனூரில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
ஓடைப்பட்டியைச் சோ்ந்த சுரேஷ் மகன் தினேஷ் (36). இவா் சீப்பாலக்கோட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வேகத் தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த தினேஷ் அவரச ஊா்தி மூலம் சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.