`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்த...
பொங்கல் பரிசுத் தொகுப்பு: 6.59 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம்
கோவையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்காக இரண்டாம் நாளாக 6.59 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 2.2 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதனை பெறுவதற்கான டோக்கன் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 11.12 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக முதல்நாளில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 559 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டது.
தொடா்ந்த இரண்டாவது நாளாக சனிக்கிழமை 6 லட்சத்து 59 ஆயிரத்து 13 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதுவரை 59 சதவீதம் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.