செய்திகள் :

பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி!

post image

புதுதில்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2024-25 ஆம் ஆண்டில், பொதுத்துறை வங்கிகளின் கடன் தள்ளுபடி ரூ.91,260 கோடியாக இருந்தது. இதுவே அதன் முந்தைய நிதியாண்டில் ரூ.1.15 லட்சம் கோடியாக இருந்தது என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்திரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

இதுவே 2020-21 ஆம் ஆண்டில் வாராக் கடன் ரூ.1.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. அடுத்த ஆண்டில் இது ரூ.1.16 லட்சம் கோடியாகவும், 2022-23ஆம் ஆண்டில் இது ரூ.1.27 லட்சம் கோடியாகவும் குறைந்தது.

அதே வேளையில் பொதுத்துறை வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.1.65 லட்சம் கோடியை வசூலித்துள்ளன. இதுவே முந்தைய ஐந்து நிதியாண்டுகளில் மொத்த தள்ளுபடியில் இந்த மீட்பு 28 சதவிகிதமாகும்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சௌத்திரி, 2024-25 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கி வழங்கிய தற்காலிக தரவுகளின் அடிப்படையில் SARFAESI சட்டத்தின் கீழ் 2,15,709 வழக்குகளில் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ரூ.32,466 கோடியை மீட்டெடுத்துள்ளன என்றார்.

இதையும் படிக்க: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

அதிக பேட்டரி திறனுடைய போக்கோ எம் 7! இந்தியாவில் அறிமுகம்!

போக்கோ எம் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய ரக ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 7000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ... மேலும் பார்க்க

கருப்பு நிறப் பிரியர்களுக்காக... நிசான் குரோ அறிமுகம்!

நிசான் கார் நிறுவனம் மேக்னைட் குரோ வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் ஆண்டுக்கு 3 புதிய கார்கள் வீதம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 9 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உ... மேலும் பார்க்க

வெறும் ரூ.59,990-ல்..! ஒரே சார்ஜிங்கில் 100 கி.மீ. செல்லும் ஜெலோ நைட் ஸ்கூட்டர்!

வெறும் ரூ.59,990 விலையில் ஒரே சார்ஜிங்கில் 100 கி.மீ. செல்லும் ஜெலோ நைட் பிளஸ் என்ற மின்சார ஸ்கூட்டரை ஜெலோ நைட் பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இந்த ஸ்கூட்டரில் 1.8 கிலோ வாட் ஹவர் எல்எப்பி பேட்டரி... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

நேற்று பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்த நிலையில் இன்று(ஆக. 13) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,492.17 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலை... மேலும் பார்க்க

7% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை

2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 7.3 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிச... மேலும் பார்க்க

ஆயில் இந்தியா லாபம் 1.4% ஆக உயர்வு!

புது தில்லி: எண்ணெய் விலை சரிந்ததால், ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாப வளர்ச்சி கிட்டத்தட்ட நிலையாக இருந்ததாக அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா லிமிடெட் இன்று தெரிவித்தது.ஏப்ரல் முதல் ஜூன் வரை... மேலும் பார்க்க