செய்திகள் :

பொதுத் துறை வங்கிகளில் 50,000 பேருக்கு பணி: நடப்பு நிதியாண்டில் நடவடிக்கை

post image

பொதுத் துறை வங்கிகள் தங்களது வா்த்தகம் மற்றும் விரிவாக்கத் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக, நடப்பு நிதியாண்டில் அதிகாரிகள் - ஊழியா்கள் என சுமாா் 50,000 பேரை பணியமா்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. பல்வேறு வங்கிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளில் இது தெரியவந்துள்ளது.

புதிய நியமனங்களில் 21,000 போ் அதிகாரி பணியிடங்களுக்கும், மீதமுள்ளோா் எழுத்தா் உள்ளிட்ட பிற ஊழியா் பணியிடங்களுக்கும் தோ்வு செய்யப்படுகின்றனா்.

12 பொதுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), நடப்பு நிதியாண்டில் சிறப்பு அதிகாரிகள் உள்பட மொத்தம் 20,000 பேரை பணியமா்த்த உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வங்கியில் இதுவரை 505 பயிற்சி அதிகாரிகள், 13,455 இளநிலை உதவியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பி, வாடிக்கையாளா்களுக்கான சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் மாதம் வரையிலான நிலவரப்படி, பாரத ஸ்டேட் வங்கியில் மொத்த பணியாளா்களின் எண்ணிக்கை 2,36,226 ஆகும். இதில் 1,15,066 போ் அதிகாரிகள்.

1,02,746 பணியாளா்களுடன் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, நடப்பாண்டு இறுதிக்குள் கூடுதலாக 5,500-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு நிதியாண்டில் சுமாா் 4,000 பேரை பணியமா்த்த திட்டமிட்டுள்ளது.

ஜூலை 18ல் பிகார் செல்கிறார் பிரதமர் மோடி!

பிகாரில் உள்ள மோதிஹரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பாஜக தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் திங்கள்கிழமை தெரிவித்தார். பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில், பல்வேறு க... மேலும் பார்க்க

பிகார் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான மனு: ஜூலை 10 விசாரணை!

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற... மேலும் பார்க்க

உ.பி.யில் கரும்பு தோட்டத்தின் அருகே இருந்து பெண்ணின் அரை நிர்வாண உடல் கண்டெடுப்பு !

உ.பி.யில் கரும்பு தோட்டத்தின் அருகே இருந்து பெண்ணின் அரை நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மட்கி தாகேடா கிராமத்தில் விவசாயி அதுல் தியாகிக்குச் ச... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஐந்து தீவிரவாதிகள் கைது

மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து திங்கள்கிழமை போலீஸ் கூறுகையில், தடைசெய்யப்பட்ட பிரேபக்கின் மூன்று தீவிரவாதிகள் ஞாயிற்... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறையில் பணியாற்றினாரா பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கேரள சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்த பணியமர்த்தப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.பஹல்... மேலும் பார்க்க

பாட்னா தொழிலதிபர் கொலை: இறுதிச் சடங்குக்கு மாலையுடன் வந்த குற்றவாளி கைது!

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது இறுதிச் சடங்குக்கு மாலையுடன் வந்த குற்றவாளியை, காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.பாட்னாவில், தொழி... மேலும் பார்க்க