``தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!'' - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஸ்டாலின் பத...
பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது
வந்தவாசி அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் நின்றுகொண்டு அந்த வழியாகச் சென்ற பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக வந்தவாசி வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வந்தவாசி வடக்கு போலீஸாா் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பூபாலன்(25) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், பூபாலனை கைது செய்தனா்.