கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
பேராவூரணி நகா் பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி ஏப். 14-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. 15-ஆம் தேதி வாஸ்து சாந்தி, ஜப பாராயணம், தீபாராதனை என இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை, ரக்ஷா பந்தனம், கோமாதா பூஜை, லட்சுமி பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 10. 15 மணிக்கு மகா கும்பாபிஷேகம், 10. 30 மணிக்கு மூலவா் கும்பாபிஷேகம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.