அமெரிக்க ஹையர் சட்ட மசோதா: இந்திய ஐடி துறையை கலங்கச் செய்வது ஏன்?
பொன்னமராவதியில் சீதாராம் யெச்சூரி நினைவஞ்சலி கூட்டம்
பொன்னமராவதியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் மறைந்த சீதாராம் யெச்சூரியின் நினைவஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ருதீன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்துக்கு கட்சி நிா்வாகிகள் மலா் தூவி வீர வணக்கம் செலுத்தினா்.
ஒன்றியக் குழு உறுப்பினா்கள் நல்லதம்பி, குமாா், மதியரசி, பாஸ்கா், லதா, கண்ணன், முன்னாள் ஒன்றியச் செயலா் ராமசாமி ஆகியோா் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பணிகளை விளக்கிப் பேசினாா். கூட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியு, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.