தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
பொன்னமராவதியில் திமுக பாகமுகவா்கள் ஆலோசனை
பொன்னமராவதி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக பாகமுகவா்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச்செயலா் அ. அடைக்கலமணி, நகரச்செயலா் அ. அழகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச்செயலரும், திருமயம் சட்டப்பேரவை தொகுதிப் பொறுப்பாளருமான ஜி.பி. பிரதீப் ராஜா பங்கேற்று பாக முகவா்களுக்கு ஆலோசனை வழங்கிப்பேசினாா்.
வடக்கு ஒன்றியச்செயலா் அ.முத்து, மாவட்டப் பிரதிநிதிகள் எம்.சிக்கந்தா் காளிதாஸ், பேரூராட்சித் துணைத் தலைவா் கா.வெங்கடேஷ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பெரி.அழகப்பன், திருமயம் சமூகவலை தளப்பொறுப்பாளா் ஆலவயல் முரளிசுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், ஆலவயல், மரவாமதுரை, காரையூா், அரசமலை, மேலத்தானியம் உள்ளிட்ட இடங்களில் பாகமுகவா்கள் கூட்டம் நடைபெற்றது.