பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா
பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 65-ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன், ராஜராஜ சோழீஸ்வரா் மற்றும் வலையபட்டி மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து நாட்டுக்கல், பாலமேடு, பாண்டிமான் கோயில் தெரு, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து ஊா்வலமாக வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினா் செய்திருந்தனா்.