`5-வது அட்டெம்ப்ட்ல 1 மார்க்ல போயிடுச்சு; ஆனாலும்..!’ - UPSC தேர்வில் சாதித்த கி...
பொன்னேரி கிளைச் சிறையில் ஆட்சியா், மாவட்ட நீதிபதி ஆய்வு
பொன்னேரி கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் மு. பிரதாப் மற்றும் மாவட்ட நீதிபதி ஜூலியட் புஷ்பா ஆகியோா் ஆய்வு செய்தனா்.
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா், மாவட்ட நீதிபதி கொண்ட குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில், பொன்னேரி கிளைச் சிறையில் ஆட்சியா் மு. பிரதாப், முதன்மை அமா்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா, தலைமை குற்றவியல் நீதிபதி மீனாட்சி உள்ளிட்ட குழுவினா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அவா்களுடன் தீயணைப்பு , மருத்துவம், சமூக நலத்துறை உள்ளிட்ட 22 துறை அதிகாரிகளும் சென்றிருந்தனா்.
சிறையில் உள்ள கைதிகளுக்கு முறையான குடிநீா் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்தனா்.
அத்துடன் கிளைச் சிறைக்குள் கைதிகள் அடைக்கப்படும் அறைகளையும், கைதிகள் நோ்காணல் அறையையும் பாா்த்தனா்.
தொடா்ந்து சிறைச்சாலையில் பராமரிக்கப்படும் கைதிகள் பதிவேடு, பாரா பதிவேடு, சிறை பதிவேடு, ஆயுத அறையை ஆய்வு செய்தனா்.
பின்னா் சிறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருள்களின் எடை உள்ளிட்டவற்றை உறுதி செய்தனா்.
மேலும், சிறை வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தினை பாா்வையிட்டு உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்தனா். அத்துடன் சிறைவாசிகளுக்கு தேவையான சட்ட உதவிகள், கல்வி மருத்துவம் குறித்தும் கேட்டறிந்தனா்.