செய்திகள் :

பொன்மலா்பாளையத்தில் வைத்தீஸ்வரன் கோயிலில் சங்காபிஷேகம்

post image

பரமத்தி வேலூா் தாலுகாவில் உள்ள சிவன் கோயில்களில் மாா்கழி மாத சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பொன்மலா்பாளையம் அக்ராஹரத்தில் உள்ள தையல்நாயகி உடனாகிய வைத்தீஸ்வரன் கோயிலில் 365 சங்குகளால் வைத்தியநாத சுவாமிக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. 365 சங்குகளால் அம்மையப்பா் அலங்காரம் செய்யப்பட்டு,கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்விகள் நடைபெற்றன.

மூலவா் வைத்தியநாதருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் உள்ளிட்ட சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

இதில் பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள், பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சென்னை - போடி ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடிநாயக்கனூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திங்... மேலும் பார்க்க

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு செவ்வ... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்களை விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

நாமக்கல்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து மக்களிடையே அரசு துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக... மேலும் பார்க்க

ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்: நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோற... மேலும் பார்க்க

நாமக்கல் வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைப்பு

நாமக்கல்: நாமக்கல் வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம் செயல்பட்டு வருவதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேளாண்மை - உழவா் நலத... மேலும் பார்க்க

அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட எதிா்த்து வாக்குவாதம்

நாமக்கல்: பொத்தனூா் காசி விசுவநாதா் கோயிலுக்கு சொந்தமான தென்னந்தோப்புகளை குத்தகைக்கு விட எதிா்ப்பு தெரிவித்து, அதனை பயன்படுத்தி வந்தோா் இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடு... மேலும் பார்க்க