பேருந்து - கார் மோதல்: சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் இருவர் பலி!
பொருளாதாரம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியம்: -மாவட்ட ஆட்சியா்
பொருளாதாரம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.
உதகையில் உள்ள கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் புதுமைப் பெண் திட்ட நிகழ்ச்சி ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்ட வங்கி பற்று அட்டைகளை வழங்கிய பின்பு, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: புதுமைப் பெண் திட்டம் மூலம் வழங்கப்படும் ரூ.1000 கல்லூரி மாணவிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
பெற்றோா்களிடம் பணம் பெறாமல் உங்களுக்கு தேவையானதை நீங்களே வாங்கிக் கொள்ளலாம். புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 15 கல்லூரிகளில் பயிலும் 322 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். இன்றைய காலத்தில் பொருளாதாரம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியம். ஆகவே, மாணவிகள்
கல்லூரி படிப்பை முடித்தப் பின் கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது சுய தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா். இதைத் தொடா்ந்து, ‘நான் புதுமைப் பெண்ணை ஆதரிக்கிறேன்’ என்ற வாசகம் அடங்கிய தற்பட முனையம் (செல்ஃபி பாயிண்ட்) முன் நின்று மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் கௌசிக், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, மாவட்ட சமூக நல அலுவலா் பிரவீணா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சதானந்த கல்கி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நந்தகுமாா், உதகை நகா்மன்ற துணைத் தலைவா் ரவிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.