செய்திகள் :

பொறியாளா் கைது விவகாரத்தை மக்களிடம் அரசு விளக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

post image

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது தொடா்பாக, பொதுமக்களுக்கு அரசு விளக்க வேண்டும் என்று, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

புதுவை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன், செயற்பொறியாளா் சிதம்பரநாதன் ஆகியோா் ரூ.7 கோடி மதிப்பிலான பணிகளுக்கான ஒப்பந்தத்துக்காக லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீனதயாளனின் பணிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பணிகளையும் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக பொதுமக்களுக்கு அரசு விளக்க வேண்டும். கைது விவகாரத்தை பேரவையில் விவாதிக்க அனுமதிக்காமல் எங்களை வெளியேற்றியதை ஏற்க முடியாது என்றாா் ஆா்.சிவா.

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி, தவளக்குப்பம் அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (42), தொழி... மேலும் பார்க்க

516 காவல், 475 விரிவுரையாளா் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவையில் 516 காவல் பணியிடங்கள், 475 கல்லூரி விரிவுரையாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என மாநில உள் துறை மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் சட்டப்பேரவையில் அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவையி... மேலும் பார்க்க

புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

உழவா்கரை நகராட்சியை புதுச்சேரியுடன் இணைத்து புதிதாக புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆட்சியாளா், ... மேலும் பார்க்க

காவல் துறையின் வருடாந்திர மாநாடு

புதுவை மாநில காவல் துறையின் வருடாந்திர மாநாடு புதன்கிழமை தொடங்கியது. மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறுகிறது. ஆண்டு தோறும் புதுவை காவல் துறையின் வருடாந்திர மாநாடு நடத்தப்பட்டு ... மேலும் பார்க்க

விண்ணப்பிக்கும் மீனவா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம்: புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா்

புதுவையில் விதிமுறைப்படி விண்ணப்பிக்கும் அனைத்து மீனவா்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என பொதுப் பணி மற்றும் மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் அறிவித்துள்ளாா். புதுவை சட்டப்பேரவையில் மானியக்... மேலும் பார்க்க

சென்னையில் பயிலும் புதுவை மாணவிகளுக்காக விடுதிகள்: அமைச்சா் சி.ஜெயக்குமாா்

சென்னையில் தங்கிப் பயிலும் புதுவை மாணவிகளுக்காக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு... மேலும் பார்க்க