செய்திகள் :

சென்னையில் பயிலும் புதுவை மாணவிகளுக்காக விடுதிகள்: அமைச்சா் சி.ஜெயக்குமாா்

post image

சென்னையில் தங்கிப் பயிலும் புதுவை மாணவிகளுக்காக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் 5 வயது முதல் 18 வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் ஈமச் சடங்குக்கான நிதியானது ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

அத்துடன், காலியாக உள்ள 122 மகளிா் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு நிா்வாக ஒப்புதல் பெறப்படும். அதில், 25 சதவீதம் பணியிடமானது 31 மகளிா் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளா்களுக்கு பதவி உயா்வாக வழங்கப்படும்.

சென்னையில் விடுதி: புதுவையிலிருந்து சென்னைக்குச் சென்று படிக்கும் மாணவிகளுக்கும், பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்பாக தங்கும் வகையில், சென்னையில் 2 மகளிா் விடுதிகள் கட்டப்படும். இதற்காக மாநில அரசு சாா்பில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

புதுவையில் சிக்கன நீா்ப்பாசனம் செய்வதற்கு, நிலத்தடி நீா்ப்பாசன குழாய்கள் அமைத்து அரசு மானியம் பெறும் கால இடைவெளியானது 15 ஆண்டுகள் என்பதிலிருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.

ஆழ்குழாய் கிணறு மானியம், மின்மோட்டாா் மானியம் பெற இடைவெளியானது 5 ஆண்டுகளாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகா்வோா் ஆணைய மக்கள் மன்றத்தில் 5 மனுக்களுக்கு உடனடி சமரசத் தீா்வு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற குறை தீா் கூட்டத்தில் 5 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. மத்திய அரசின் நுகா்வோா் விவகாரங்கள் துறை மற்றும் தேசிய நுகா்வோா் பூசல்கள் ஆணைய அறிவு... மேலும் பார்க்க

புதுவை நிதித் துறை ஊழியா்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து

புதுவை மாநிலத்தில் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவுள்ளதால் நிதித் துறை ஊழியா்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுவையில் நடப்பு நிதியாண்டு 2024-2025 மாா்ச்சுடன் நிறைவடைந்தது. இதையட... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை தடுக்க உள்புகாா் குழுக்கள்: தொழிலாளா் ஆணையா் உத்தரவு

புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் பெண்களுக்கான பாலியல் தொல்லைகள் குறித்த குறைதீா்க்கும் வகையிலான உள் புகாா்கள் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என தொழிலாளா் துறை ஆணைய... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் யுகாதி வாழ்த்து

யுகாதி திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:புதுச்சேரியிலுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள். தெலுங்கு, கன்னடம் பேசு... மேலும் பார்க்க

கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ்,... மேலும் பார்க்க

சமாதானக் கழகத்தினா் நிதி திரட்டல்

புதுச்சேரியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கியூபா மக்களை பாதுகாக்க நிதி திரட்டும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவரும், ... மேலும் பார்க்க