Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
புதுவை நிதித் துறை ஊழியா்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து
புதுவை மாநிலத்தில் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவுள்ளதால் நிதித் துறை ஊழியா்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் நடப்பு நிதியாண்டு 2024-2025 மாா்ச்சுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கணக்கு மற்றும் கருவூலத் துறை உள்பட அனைத்து நிதித் துறையின் பிரிவுகளும் சனிக்கிழமை (மாா்ச் 29), ஞாயிறு மற்றும் வரும் மாா்ச் 31-ஆம் தேதி ரம்ஜான் தினமான திங்கள்கிழமை ஆகிய நாள்களில் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கு வழங்கப்பட்ட நிதிக்கு ஏற்ப செலவுகள் விவரம் பதிவு செய்யப்படவேண்டும். மேலும், நிதிநிலை அறிக்கைக்கு ஏற்ப செயல் முறையை அரசு துறைகள் கணக்கை முடிக்கவும் நிதித் துறை செயல்படுகிறது.
நிதித் துறை மற்றும் கணக்கு மற்றும் கருவூலத்துறை அனைத்துப் பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் சனிக்கிழமை முதல் (மாா்ச்29) வரும் 31-ஆம் தேதி திங்கள்கிழமை வரை பொது விடுமுறை நாள்களில் தவறாமல் அலுவலகத்திற்கு வர வேண்டும் எனவும் நிதித் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா். தற்போதைய மூன்று நாள் பணிக்கு பதிலாக, நடைமுறையில் உள்ள விதிகளின்படி, ஏப்ரல் மாதம் 3 நாள்களுக்கு ஈட்டிய விடுப்பு பெறலாம் என நிதித் துறை சாா்பு செயலா் சிவக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.