பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்
சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
புதுச்சேரி, தவளக்குப்பம் அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (42), தொழிலாளி.
இவா், கடந்த 2023- ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது.
மேலும், சிறுமியை கா்ப்பமாக்கியதாகவும் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், தவளக்குப்பம் போலீஸாா், குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷை போக்ஸோ சட்டப் பிரிவில் கைது செய்தனா்.
அவா் மீதான வழக்கு விசாரணை, புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி சுமதி உத்தரவிட்டாா்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் புதுவை அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.