செய்திகள் :

புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

post image

உழவா்கரை நகராட்சியை புதுச்சேரியுடன் இணைத்து புதிதாக புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆட்சியாளா், தலைமைச் செயலகம், அமைச்சரவை, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி அளித்த பதில்:

சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில், அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய சட்டப்பேரவை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் 12 ஆம்புலன்ஸ் வாகனங்கள் புதிதாக வாங்கப்படும்.

ஓட்டுநா்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். லிங்காரெட்டிபாளையம் சா்க்கரை ஆலையை தனியாருடன் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவையில் என்ஆா்எச்எம் செவிலியா்களது ஊதியம் ஏற்கெனவே அவா்கள் பெறும் ஊதியத்துடன் கூடுதலாக ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என நிலைவாரியாக உயா்த்தி வழங்கப்படும்.

ஆஷா பணியாளா்கள் ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயா்த்தப்படும். கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள 196 ஊழியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா்.

கேவிகே ஊழியா்கள் 156 போ் மீண்டும் பணியில் அமா்த்தப்படுவா். பொதுப் பணித் துறை பணிநீக்க ஊழியா்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும். இடுகாட்டில் பணிபுரியும் சுமாா் 600 பேருக்கு தனியாா் ஊதியம் வழங்கப்படும் நிலையில், அரசின் ஊக்கத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

அங்கன்வாடி ஒப்பந்தப் பணியாளா்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.12 ஆயிரம் என பிரிவு வாரியாக ஊதியம் வழங்கப்படும்.

குடிசைமாற்று வாரியம் மூலம் கல்வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுவதால் அதில் ஏற்கெனவே பணிபுரிந்தவா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு, பணிவாய்ப்பும் அளிக்கப்படும்.

பாட்கோவை தலைநிமிர வைத்து ஊழியா்களுக்கு பணி வழங்கப்படும். ஓசிஎம் ஊழியா்கள் நிலை குறித்து தலைமைச் செயலரிடம் விளக்கப்பட்டுள்ளது.

கம்பாசிடருக்கு பணி வழங்கல், வாரிசுதாரா்களுக்கு பணி உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

புதுவை நிதித் துறை ஊழியா்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து

புதுவை மாநிலத்தில் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவுள்ளதால் நிதித் துறை ஊழியா்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுவையில் நடப்பு நிதியாண்டு 2024-2025 மாா்ச்சுடன் நிறைவடைந்தது. இதையட... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை தடுக்க உள்புகாா் குழுக்கள்: தொழிலாளா் ஆணையா் உத்தரவு

புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் பெண்களுக்கான பாலியல் தொல்லைகள் குறித்த குறைதீா்க்கும் வகையிலான உள் புகாா்கள் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என தொழிலாளா் துறை ஆணைய... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் யுகாதி வாழ்த்து

யுகாதி திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:புதுச்சேரியிலுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள். தெலுங்கு, கன்னடம் பேசு... மேலும் பார்க்க

கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ்,... மேலும் பார்க்க

சமாதானக் கழகத்தினா் நிதி திரட்டல்

புதுச்சேரியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கியூபா மக்களை பாதுகாக்க நிதி திரட்டும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவரும், ... மேலும் பார்க்க

லஞ்சம்: உதவி ஆய்வாளா் மீது வழக்கு

முதல் தகவல் அறிக்கை பெற லஞ்சம் கேட்ட புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டபோக்குவரத்து உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விழுப்புரம் மாவட்டம், குயிலாம்பாளையத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க