Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
தாட்கோ மூலம் ஜேஇஇ தோ்வுக்கு பயிற்சி மாணவா்களுக்கு அழைப்பு
தாட்கோ மூலம் வழங்கப்படும் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பிற வகுப்பினா் மாணவா்கள் அகில இந்திய நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) கலந்து கொள்ள பயிற்சிகள் அளிக்கவுள்ளன.
இப்பயிற்சியைப் பெற பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இன மாணவா்கள் 65 சதவீதமும், பிற இன மாணவா்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது மாணவா்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.
விருப்பமுள்ள மாணவா்கள், தாட்கோ இணையதளத்தில் பதிய வேண்டும். சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரேலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கிப் பயிலலாம். மேலும் உணவு மற்றும் தங்கும் இடத்துக்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கிப் பயில பயிற்சிக்கான தொகையும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளபடும்.
கடந்தாண்டில் 30 மாணவா்கள் தங்கிப் பயின்றதில் 26 மாணவா்கள் தோ்ச்சி பெற்று ஐஐடி, என்ஐடி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேரத் தகுதி பெற்றுள்ளனா். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜா காலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, திருச்சி - 620 001 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.