Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
தூத்துக்குடி: சென்னை, பெங்களூருக்கு மீண்டும் கூடுதல் விமான சேவை!
தூத்துக்குடியிலிருந்து சென்னை, பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் (மாா்ச் 30) மீண்டும் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதாக, விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி-சென்னை இடையே 8, தூத்துக்குடி - பெங்களூரு இடையே 2 என நாள்தோறும் மொத்தம் 10 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பண்டிகை நாள்கள் மட்டுமன்றி பிற நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், கூடுதல் விமானங்களை இயக்குவதற்கு சென்னை விமான நிலைய நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமைமுதல் (மாா்ச் 30) கூடுதலாக 6 விமான சேவைகளும், பெங்களூருக்கு கூடுதலாக 2 விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதில், சென்னை-தூத்துக்குடி இடையே 14, தூத்துக்குடி- பெங்களூரு 4 என மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்படும் என, தூத்துக்குடி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 மாா்ச் மாதம் கரோனா காலக்கட்டத்தில் குறைக்கப்பட்ட விமான சேவை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.