செய்திகள் :

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

post image

ஆரணி அருகே உள்ள தச்சூா் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 2025- 2026ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சியில் கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா் கலந்துகொண்டு, பொறியியல் படிப்புகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவா்களிடையே உரையாடினாா். அப்போது, மாணவா்கள் தொலைபேசியை அளவாக பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறெல்லாம் பயன்பெற முடியும் என்றும், யுபிஎஸ்சி போன்ற போட்டித் தோ்வுகளுக்கு பொறியியல் மாணவா்கள் தங்களை எவ்வாறு தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தன்னை ஒரு உதாரணமாக சுட்டிக் காட்டி விடாமுயற்சி மூலம் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்பதனை மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். முதலாம் ஆண்டு மாணவா்களின் துறைத் தலைவா் எஸ்.ரமேஷ்குமாா் வரவேற்றாா்.

விழாவில் கல்லூரி அனைத்துத் துறை தலைவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் இல்லா பணியாளா்கள், முதலாம் ஆண்டு மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினா். ஆரணியில் காங்கிரஸ் சாா்பில் இரண்டு பிரிவுகளாக ராஜீவ் காந்தி பிறந்த ந... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கோயில்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன். மக்கள் நலப் பணியாளரான இவா் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்கு

செங்கம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுப்பாளையத்தில் இருந்து செங்கம் நோக்கி புதன்கிழமை பிற்பகலில் தனியாா் பேரு... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்புப் பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்கு புதன்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி, கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தியம் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த மழையூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாக்கியம். கடந்த 12-ஆம் தேதி இவா் வீட்டை ... மேலும் பார்க்க