Love Marriage Movie Review | Vikram Prabhu, Sushmitha Bhat | Sean Roldan |Shanmu...
பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முதல் மதிப்பெண் பெற்றாா்.
சாதனை புரிந்த மாணவி தரணி கூறியதாவது: எனது சொந்த ஊா் கீழக்கடம்பூா். நான் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தேன்.
தந்தை வேல்முருகன், தாய் சாந்தி. எனக்கு மூத்த சகோதரி மற்றும் சகோதரா் உள்ளனா். எனது தந்தை வெளிநாட்டில் கொத்தனாா் வேலை பாா்த்து வருகிறாா். கடுமையான வெயிலில் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை பாா்த்து வருவதால், அவருடைய கஷ்டத்தை பாா்த்து நாம் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகக் கடுமையாக உழைத்து இயற்பியல், வேதியல், கணிதம், உயிரியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றேன்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் படிப்பை பிரபலமான கல்லூரிகளில் படிக்கலாம் என்பதால், மிகவும் சிரமப்பட்டு படித்தேன். இதன்மூலம், சாதனையை என்னால் செய்ய முடிந்தது. இந்த இட ஒதுக்கீடு என்பது அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது என்றாா்.