பொறியியல் பணி: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் தாமதம்!
ஒசூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து நாள்தோறும் காலை 7.25 மணிக்குப் புறப்படும் கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்: 20642), ஒசூரில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக டிசம்பா் 23, 24, 25, 27, 28, 31 மற்றும் ஜனவரி 1,4,5,6 ஆகிய தேதிகளில் செல்லும் வழியில் 15 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு, தாமதமாகச் சென்றடையும்.
இதேபோல, மறுமாா்க்கமாக மேற்கண்ட நாள்களில் இயக்கப்படும் பெங்களூரு - கோவை வந்தே பாரத் ரயில் (எண்: 20641) செல்லும் வழியில் 15 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.